தேவையான பொருள்கள்:
பசலைக் கீரை- 15
கடலை மாவு- 2 கிண்ணம்
அரிசி மாவு- 1 கிண்ணம்
மிளகாய்த் தூள், பெருங்காயத் தூள்- தலா 1 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை:
பசலைக் கீரை இலைகளைத் தண்ணீரில் அலசி சுத்தம் செய்து கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த் தூள், பெருங்காயத் தூள், உப்பு போட்டு தேவையான அளவு தண்ணீரைவிட்டு மாவை நீர்க்கக் கரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் நன்றாகக் காயவிடவும். ஒவ்வொரு பசலைக்கீரை இலையாக எடுத்து, கரைத்துவைத்துள்ள மாவில் சேர்த்து காய்ந்த எண்ணெயில் போடவும். இருபுறமும் நன்றாக வெந்ததும், சூடாகப் பரிமாறவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.