
சமையலறையில் முடிந்தவரை குழந்தைகளை செல்ல அனுமதிக்காதீர்கள். குழந்தையை கையில் வைத்துகொண்டோ, கைப்பேசி பேசிக் கொண்டோ சமைப்பதும் மிக ஆபத்தானது.
தூக்கக் கலக்கத்தில் சமையல் அறைக்குச் சென்று சமைக்காதீர்கள்.
வீட்டில் உபயோகப்படுத்தும் மின்சாதனப் பொருள்களின் மின் இணைப்புகள் குழந்தைகள் கைபடாத வகையில் இருக்க வேண்டும். அதற்கு வழியில்லை என்றால் நிறைய சாமான்கள் கொடுத்து விளையாட விட்டு கண் முன்னே குழந்தைகளைக் கவனித்துக்கொண்டு வேலைகளைச் செய்யுங்கள். குழந்தையை கட்டிலில் போட்டு விட்டு தனி அறையில் விடாதீர்கள். தூக்கத்தில் உருண்டு கீழே விழுந்து விடுவார்கள்.
சமைக்கும் முன்பு குழந்தையை குளிக்க வைத்து உணவை ஊட்டி வயிற்றை நிறைத்தால் கண்டிப்பாக ஒரு மணி நேரமாவது தூங்குவார்கள். அந்த நேரத்தில் சமையலை முடித்துக் கொள்ளலாம்.
சமையலறைத் தொட்டிகள் அல்லது பெரிய பாத்திரங்களில் தண்ணீர் நிரப்பி திறந்து வைக்காதீர்கள்.
மிக்ஸி, கிரைண்டரை பயன்டுத்தி முடித்ததும் சுவிட்சை அணைப்பதோடு, ப்ளக்கையும் உருவிப் போடுவது நல்லது.
குழந்தைக்கு எட்டாத இடத்தில் மண்ணெண்ணெய், பினாயில் போன்றவற்றை வைக்க வேண்டும்.
சமையல் சிலிண்டருக்கு முதல் முறையாக இணைப்புப் பெறும்போது, காஸ் பாதுகாப்பாக பயன்படுத்தும் முறை பற்றி தெரியாவிட்டால் விநியோகிக்கும் நபரிடம் செயல்முறை விளக்கம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
வெப்பமான பிற பொருள்களில் இருந்து சிலிண்டரை சில அடிகள் தள்ளி வைத்திருக்க வேண்டும். அதன் அருகில் மண்ணெண்ணெய் அல்லது எளிதில் தீபிடிக்கும் எதையும் வைக்கக் கூடாது.
சிலிண்டர் வால்வின் உள்புறத்தில் ரப்பர் டியூப் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
சிலிண்டரில் கசிவு இருப்பதாக உணர்ந்தால் உடனே சோப்பு நீர் கலந்து சிலிண்டர் மீது ஊற்றினால் நீர்க் குமிழ் உருவாகும். இதைக் கொண்டு எரிவாயுக் கசிவை பரிசோதிக்கலாம். எரியும் தீக்குச்சி மூலம் பரிசோதிக்கக் கூடாது.
நைலான் கயிற்றுடன் இருக்கும் பாதுகாப்பு மூடி எப்போதும் சிலிண்டரிலேயே பிணைக்கப்பட்டிருக்க வேண்டும். கேஸ் கசிவு இருப்பதை அறிந்தால் பாதுகாப்பு மூடியால் வால்வை மூட வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.