
தினமும் சிறிதளவு திராட்சை சாறு குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்:
பழங்களில் பலரும் விரும்பிச் சாப்பிடும் பழம்தான் திராட்சை. இதை அப்படியே சாப்பிட பலர் விரும்பினாலும் சாறு எடுத்து குடித்தால் முழுச் சத்துகளையும் பெறலாம். அதில் திராட்சை ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், உடலில் உள்ள பல பிரச்னைகள் தடுக்கப்பட்டு, உடலின் ஆரோக்கியம் மேம்பட்டிருப்பதைக் காணலாம்.
திராட்சை சாறு இதயத் தசைகளை சீராகச் செய்து, ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, ரத்த அழுத்தத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்படுவதைத் தடுக்கும். வைட்டமின் சி, அதிகம் இருப்பதால், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.