சமையல் குறிப்புகள்..

சமைக்கும்போது கீரையைத் தவிர எது சமைத்தாலும் பாத்திரத்தை மூடி வைக்க வேண்டும்.
சமையல் குறிப்புகள்..
Published on
Updated on
1 min read

சமைக்கும்போது கீரையைத் தவிர எது சமைத்தாலும் பாத்திரத்தை மூடி வைக்க வேண்டும்.

காய்கறி சாலட் செய்யும்போது, ஒரு கிண்ணம் பாசிப் பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து, சாலட்டில் போட்டால் சுவையாகவும், அருமையாகவும் இருக்கும்.

மோர் குழம்பின் மகிமை: மோர் குழம்புக்கு அரைக்கும் கலவையுடன் ஒரு தேக்கரண்டி கடுகையும் சேர்த்து அரைத்து மோர்குழம்பு செய்தால், வாசனையாகவும், சுவையாகவும் இருக்கும்.

மோர் குழம்பை இறக்கியவுடன் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்தால் ருசியாகவும், மணமாகவும் இருக்கும்.

மோர் குழம்பு செய்யும்போது மோர் அல்லது தயிருடன் ஒரு தேக்கரண்டி கடலைமாவை சேர்த்து கட்டிகள் இல்லாமல் கரைத்து ஊற்றி கொதிக்கவிட்டால், மோர் குழம்பு திரிந்து போகாமல் சுவையாக இருக்கும்.

மாங்காய் தொக்கின் மகத்துவம்: -மாங்காய் தொக்கு செய்யும்போது, மாங்காய்களைத் துருவி சேர்ப்பதற்குப் பதிலாக, தோல் சீவி துண்டுகளாக்கி மிக்ஸியில் அரைத்துவிட்டால் தொக்கு செய்ய சுலபமாக இருக்கும்.

 மாங்காய்களைத் தோல் சீவி, துருவி வெயிலில் உலர்த்தினால் இரண்டு நாள்களில் வடகம் போல் நன்கு காய்ந்து உலர்ந்து விடும். இதை மிக்ஸியில் அரைத்தால் புளிக் குழம்புக்குத் தேவைப்படும்போது உபயோகித்துகொள்ளலாம்.

 மாங்காய் இனிப்பு பச்சடி செய்யும்போது, தோலை சீவாமல் அப்படியே செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

 மாங்காயைத் துண்டுகளாக நறுக்கி தேவையான உப்பு, மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து ஒரு நாள் முழுவதும் ஊற வைக்கவும். மறுநாள் ஊற வைத்த மாங்காய் துண்டுகளை வெயிலில் இரண்டு நாள்கள் வரை காய வைத்து மா வத்தலை செய்யலாம்.

 புளிப்பில்லாத மாங்காய்களை தோல் சீவி வேக வைத்து சர்க்கரைப் பாகுடன் அடுப்பில் வைத்து கிளறி ஜாமாகச் செய்து சாப்பிடலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com