பழங்களின் பயன்கள்...

நாம் உண்ணும் பழங்கள் பல நமக்கு பல சத்துகளைத் தருகின்றன. பழங்களும், பயன்களும்...
பழங்களின் பயன்கள்...


நாம் உண்ணும் பழங்கள் பல நமக்கு பல சத்துகளைத் தருகின்றன. பழங்களும், பயன்களும்...

வாழைப்பழம்: தயிருடன் சேர்த்து உண்ணக் கூடாது. பேயன் வாழைப்பழம் நோய் எதிர்ப்புச் சக்தியைத் தரும்.  மலை வாழைப்பழம் ஆண் மலடை நீக்கும்.

புளியம்பழம்: மது போதையால் ஏற்படும் விஷத்தைப் போக்கும். புளிப்புள்ள பழங்களை எப்போதும் தனித்தே சாப்பிட வேண்டும்.

நாவல் பழம்: ரத்தத்தைப் பெருக்கும். உள்வெப்பத்தை அடக்கும்  நீர்வேட்கையை நீக்கும். பசியை உண்டாக்கி வயிற்றுப் போக்கை நிறுத்தும்.

பேரீச்சம் பழம்: பித்த ரோகம், மல பந்தம்போகும். நரம்புத் தளர்ச்சியும் குணமாகும். ரத்த விருத்தி ஏற்படும். உடல் வளர்ச்சி பெறும்.

திராட்சைப் பழம்:  உடல் குளிர்ச்சி பெறும். சுக்கில விருத்தியும் ரத்த விருத்தியும் உண்டாகும். இதயத்தில் உள்ளகுறைபாடுகள் நீங்கும்.

கிச்சிலிப் பழம்:  "போஜன் கஸ்தூரி என்பது இதன் பெயர். ரத்தத்தைச் சுத்தம் செய்யும்.  உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் பித்தத்தைக் குறைத்து, ஆரோக்கியம், ஜீரணச் சக்தியை அளிக்கும். இருமல், சர்க்கரை, மார்பு நோய், ஈரல் நோய்கள் குணமாகும்.

மங்குஸ்தான் பழம்: நாள்பட்ட கழிச்சல், சீதக் கழிச்சல், வெள்ளை ஆகியன தீரும். பழத்தை வேகவைத்துப் பிழிந்து எடுத்த சாற்றை நெருப்பில் வற்ற வைத்து சர்க்கரை கலந்து பாகு செய்து உள்கொள்ள நாட்பட்ட கழிச்சல் நீங்கும்.

குறட்டாம் பழம்: தலைக்கு தைலமாகத் தேய்த்துப் பயன்படுத்த மூளைக்கட்டி, மூளைப் புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.

தர்பூசணி பழம்: தாகத்தைத் தணிக்கும். சிறுநீர்க் கோளாறுகளை அகற்றும். குடலுக்கு நல்ல பலனளிக்கும். பசியின்மை, அஜீரணம் நீங்கும்.

ஆரஞ்சுப் பழம்: குடலுக்கும் உடலுக்கும் நன்மை செய்யும். பல் நோய், சரும நோய், மூத்திரக் கோளாறுகள் நீங்கும், ஜீரணச் சக்தியை அபிவிருத்தி செய்யும்.

வேப்பம் பழம்:  இதன் ரசத்தை எடுத்து மணப்பாகு செய்து உட்கொண்டால் தோல் நோய்கள் குணமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com