
தேவையான பொருள்கள்:
நறுக்கிய பிரண்டை- 1 கிலோ
மோர்- 200 மி.லி.
உப்பு- சிறிதளவு
செய்முறை:
சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய பிரண்டையைச் சிறிதளவு நீர்விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து வேக வைக்கவும். பின்னர் அதனுடன் மோர் சேர்த்து ஊற வைக்கவும். பின் அதை வெயிலில் வத்தல் ஆகும் வரை காயவைக்கவும். இதை எடுத்து ஒரு சுத்தமான காற்றுப் புகாத பாத்திரத்தில் வைத்துகொண்டு தேவைப்படும்போது, இதை எண்ணெயில் வறுத்து சாப்பிடலாம். சாதத்திலும் பொடியாக்கி, பிசைந்து உபயோகிக்கலாம்.