கேக் செய்யும் முன்...

கேக் செய்யும் முன்...

Published on

கேக் செய்யும் முன் கவனிக்க வேண்டியவை:

ஐசிங் இல்லாமல் கேக்குகளை அழகுப்படுத்தும்போது, பூ வேலைப்பாடுகள் துளையுள்ள சிறு பிளாஸ்டிக் தட்டுகளைக் கொண்டு கேக்குகளை அழகுப்படுத்தலாம். அந்த பிளாஸ்டிக் தட்டை கேக்கின் மீது வைத்து கொஞ்சம், கொஞ்சமாக ஐசிங் சர்க்கரையை அதன் மேல் சரித்துவிட்டு பின்னர் பிளாஸ்டிக் வட்டத்தை எடுத்துவிட வேண்டும். இப்போது கேக், பூ வேலைப்பாடுகளுடன் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

அக்ரூட் கொட்டையை உடைத்து அதிலுள்ள பருப்புகளை எடுத்து இரண்டாக உடைத்து, வைத்துகொள்ள வேண்டும். சூடு ஆறிய நிலையில், கேக்குகளை எடுத்து அவற்றின் மீது ஜாமை தடவி அதன் மீது உடைந்த அக்ரூட் பருப்புகளையும் செர்ரி பழத் துண்டுகளையும் வரிசையாக மாற்றி அடுக்கினால் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com