
படர் தாமரை வந்தவர்கள் சிறிது மிளகை நெய்விட்டு அரைத்துத் தடவினால் படர்தாமரை போய்விடும்.
மாத விலக்கின்போது, சில பெண்களுக்கு உதிரப் போக்கு அதிகமாகி வயிறு வலிக்கும். இவர்கள் 8 குறுமிளகையும் சம எடை கற்கண்டையும் சேர்த்து நீர்விட்டு காய்ச்சி பாதியாக சுண்டியதும் சாப்பிட வயிற்று வலி தீரும்.
கர்ப்பிணிகள் அதிக அளவில் இளநீர் குடித்து வந்தால் மார்பகம் விரிந்து, பிறக்கும் குழந்தைகளுக்கு அதிக அளவு தாய்ப் பால் கொடுக்க வழி வகுக்கும்.
காட்டாமணக்கு இலையை வதக்கிக் கட்ட தாய்ப் பால் சுரக்கும்.
கிச்சிலிக் கிழங்கை வில்லைகளாக நறுக்கி காயவைத்து இடித்து தூள் செய்து வைத்துக் கொண்டு வாய் துர்நாற்றம் உள்ள நேரங்களில் கொப்பளிக்க வாய் துர்நாற்றம் நீங்கும்.
பனிக் காலங்களில் உதடு வெடிப்பு ஏற்படும். இதற்கு கரும்புச் சக்கையை எடுத்து சாம்பலாக்கி அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதடு வெடிப்பு குணமாகும்.
சுக்கு சிறிது கருப்பட்டி இவைகளை பொடித்து வைத்துக் கொண்டு தினம் இருவேளை வீதம் 3 நாள்கள் சாப்பிட்டு வர உடல் அசதி தீரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.