
எலுமிச்சை காயை தலையில் தடவி பிறகு ஷாம்பு போட்டு குளித்தால் தலைமுடி அழகாய் இருக்கும்.
கஸ்தூரி மஞ்சளுடன் சிறிது தயிர் கலந்து நன்கு உடலில் தடவி பின்னர் குளித்தால் மேனி பளபளப்பாகும்.
ஆரஞ்சு சாற்றை முகத்தில் பூசி பத்து நிமிடங்கள் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பளபளக்கும்.
இளநீரில் சிறிது மஞ்சள் தூளைக் கலந்து முகத்தில் தடவினால் முகப்பரு மறையும்.
மோரைப் பஞ்சில் தோய்த்து முகம், கழுத்தில் தேய்த்து வந்தால் எண்ணெய் பசையுள்ள தோல் பளபளப்பாகும்.
பீட்ருட்டை வெட்டி அதன் சாற்றை உதடுகளில் தேய்த்து வர உதடுகள் சிவப்பாக மாறிவிடும்.
வெள்ளரிச்சாறுடன் ஆப்பிள் சாறையும் சம அளவில் கலந்து முகத்தில் தடவி வர ஒவ்வாமையால் முகத்தில் ஏற்படும் அலர்ஜி நீங்கிவிடும்.
வாரம் இருமுறை எலுமிச்சைச் சாறில் உப்பு கலந்து பல் தேய்த்து வந்தால் பற்களில் உள்ள கறை அகலும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.