சமையல் குறிப்புகள்...

முட்டைக்கோஸை சமைக்கும்போது ஒரு துண்டு இஞ்சியையும் சேர்த்து சமைத்தால், அதன் மணம் மாறாமல் இருக்கும்.
சமையல் குறிப்புகள்...

முட்டைக்கோஸை சமைக்கும்போது ஒரு துண்டு இஞ்சியையும் சேர்த்து சமைத்தால், அதன் மணம் மாறாமல் இருக்கும்.

கொத்துமல்லி இலைகளை நன்கு ஆய்ந்து சுத்தமாகத் தண்ணீரில் அலசி காய வைத்து, காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைத்தால், அதிக நாள்கள் கெட்டுப் போகாது.

தேங்காய்க்குப் பதிலாக, வேர்க்கடலை, முந்திரி போட்டு சட்னி செய்தால் சுவையாக இருக்கும்.

துவரம் பருப்பை வேக வைக்கும்போது, ஒரு தேக்கரண்டி வெந்தயத்தையும் சேர்த்தால் சாம்பார் இரவு வரை கெடாமல் இருக்கும்.

தக்காளிப் பழங்களை மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் கலந்தால், சாம்பார் சிவப்பாகவும் ருசியாகவும் இருக்கும்.

பொடியாக நறுக்கிய பாகற்காயோடு சீரகம், மிளகு, உப்பு கலந்து சூப் செய்யலாம்.

வெந்த உருளைக் கிழங்கின் மேல் பயத்தம் மாவை பூசி செய்யும் பொரியல் பிரமாதமாக இருக்கும்.

அப்பம் செய்யும்போது, அரிசி மாவுடன் சிறிதளவு வெண்ணெய் சேர்த்து செய்தால், அப்பம் மொறுமொறுவென்று நல்ல சுவையாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com