தேவையான பொருள்கள்:
பச்சரிசி - அரை கிலோ
ஏலக்காய் - 4
வெல்லம் - கால் கிலோ
நெய் - தேவையான அளவு
திரி - 2
செய்முறை:
பச்சரிசியைக் கழுவிக் களைந்து மெல்லிய வெள்ளைத் துணியில் பரப்பிக் காய வைக்கவும். லேசான ஈரப்பதத்துடன் இருக்கும்போது மிக்ஸியில் சிறிது கொரகொரப்பாக, ஏலக்காய் சேர்த்து அரைக்கவும். பின்னர், வெல்லத்தைத் தூளாக்கி, அரைத்த அரிசி மாவுடன் கலந்து வைக்கவும். அந்த மாவை நன்றாகப் பிசைந்து உருண்டையாக உருட்டவும். உருண்டையின் மேல் எலுமிச்சைப் பழத்தை அழுத்தி குழி போலச் செய்துகொள்ளவும். குழியின் ஓரத்தில் மூன்று இடங்களில் குங்குமப்பொட்டு வைத்து, குழியில் நெய்விட்டுத் திரிபோட்டு விளக்கேற்றி வைக்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.