முதன்முதலில்...

1928 ஆம்ஸ்டெர்டாம் ஒலிம்பிக்கில் பெண்கள் தடகளத்தில் பங்கேற்ற முதல் முறை
முதன்முதலில்...
Updated on
1 min read

கி.பி. 1928-ஆம் ஆண்டு ஆம்ஸ்டெர்டாம் ஒலிம்பிக்கில்தான் முதன்முதலில் தடகளப் போட்டியில் பெண்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். இதில், 12 நாடுகளைச் சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்றனர்.

பிரபல நாவல் ஆசிரியை லட்சுமி தனது 14-ஆம் வயதில் நாவல்களை எழுதத் தொடங்கினார். இவரது முதல் நாவலான "பவானி'யை இரண்டே நாளில் எழுதி முடித்தார். இந்தப் பிரசித்தி பெற்ற நாவல், 1945-இல் விகடனில் தொடராக வெளிவந்தது.

-உ.ராமநாதன், நாகர்கோவில்.

இந்தியாவின் முதல் யானைப் பாகனாக, அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த பார்வதி பருவா இருக்கிறார். இந்த ஆண்டு குடியரசுத் தின விழாவில், பத்ம விருதுகள் பெற்று குடியரசுத் தலைவரால் கௌரவிக்கப்பட்ட 132 பேரில் பார்வதி பருவாவும் ஒருவர். யானைகள் பாதுகாப்பு, மீட்பு, யானைகள்- மனிதர்கள் மோதலைத் தடுப்பதற்காக இவர் எடுத்த நடவடிக்கைக்காக, பத்மஸ்ரீ விருதைப் பெற்றுள்ளார்.

அமெரிக்காவில் 96-ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றபோது, குறைந்த வயதில் விருது பெற்றவராக பில்லி எல்லீஸ் அறியப்பட்டார். "பார்பி' படத்தில் "வாட் வாஸ் ஐ மேட் பார்...'' என்ற பாடலுக்கு ஆஸ்கர் விருதை அவர் பெற்றார்.

இதற்கு முன்பு "ஜேம்ஸ்பாண்ட் தீம்' பாடலான "நோ டைம்டு டை' எனும் பாடலைப் பாடியதற்காக, இவர் ஏற்கெனவே ஆஸ்கர் விருதைப் பெற்றவர். இருபத்து இரண்டு வயதில் அவர் இரு ஆஸ்கர் விருதுகளைப் பெற்று, சாதனையைப் படைத்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்படவைக்கிறது.

1939-ஆம் ஆண்டில் திரைக்கு வந்த "தியாகபூமி' எனும் படத்தில் "தேச சேவை செய்ய வாரீர்' என்ற சுதந்திரப் பாடலை டி.கே.பட்டம்மாள் பாடினார். இதுவே இவரது முதல் பாடலாகும். "பெற்ற தாய்' படத்தில் "அழைத்தாய்' என்ற பாடலை பி.சுசீலா தமிழில் முதன்முதலில் பாடினார்.

"வீட்டுக்கு வந்த மருமகள்' என்ற படத்தில் "ஓர் இடம் உன்னிடம்...' என்ற பாடலை வாணி ஜெயராம் முதன்முதலில் பாடினார். "நீதிக்குத் தண்டனை' என்ற படத்தில் இடம்பெற்ற "சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா...' என்ற படத்தில் சௌர்ணலதா முதன்முதலில் பாடினார். "கன்னத்தில் முத்தமிட்டால்' என்ற படத்தில் இடம் பெற்ற "ஒரு தெய்வம் தந்த பூவே' என்ற பாடல்தான் சின்மயி பாடிய முதல்பாடலாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com