ஹெல்தி வெஜ் பேல்

சுவையும் சத்தும் நிறைந்த வெஜ் பேல் செய்முறை

தேவையான பொருள்கள் :

வெங்காயம், கேரட் - தலா 1

அரிசி மாவு, கோதுமை மாவு -தலா 1 கிண்ணம்

பச்சை மிளகாய் - 2

உப்பு - சிறிதளவு

மிளகு பொடி - 1/2 தேக்கரண்டி

பெருங்காயம் - 1 சிட்டிகை

எண்ணெய் - தாளிக்க

கடுகு - 1/4 தேக்கரண்டி

கொத்தமல்லி, கருவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:

வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி கடுகு, வெங்காயம், கேரட்டை போட்டு கிளறி உப்பு, மிளகு பொடி போட்டு வதக்கவும். வேறொரு பாத்திரத்தில், அரிசி மாவு, கோதுமை மாவு, பச்சை மிளகாய், உப்பு, மிளகுத் தூள், பெருங்காயம் போட்டு, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர்விட்டு மாவாகப் பிசைந்து கடுகை தாளித்து போட்டு, இட்லி தட்டில் எண்ணெய் தடவி மாவை சிறிது சிறிதாக உருட்டி 5 நிமிடங்கள் "ஆவியில் வேகவைத்து' ஆறியவுடன் எடுத்து வதக்கிய காய்கறியில் உதிர்த்து, கொத்தமல்லி, கருவேப்பிலை சேர்த்து பரிமாறவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com