பாசிப்பருப்பு பணியாரம்

சுவையான பாரம்பரிய சிற்றுண்டி செய்முறை
பாசிப்பருப்பு பணியாரம்

தேவையான பொருள்கள்:

பச்சரிசி, வெல்லம்- 300 கிராம்

பாசிப் பருப்பு- 50 கிராம்

எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை:

அரிசியை ஊறவைத்து நிழலில் உலரவைத்து திரித்து சலிக்க வேண்டும். வெல்லத்தில் தண்ணீர்விட்டு கரைந்ததும் கீழே இறக்கி மாவில் பாகை விட்டு பிசைந்து வைக்க வேண்டும். கலந்துவைத்துள்ள மாவில் பாசிப் பருப்பை அதிகம் தண்ணீர் இல்லாமல் ஊற்றி தோசை மாவு பதத்துக்கு மாவை கரைத்துகொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய்விட்டு அடுப்பில் வைத்து காய்ந்ததும் அகலமான வட்டமான கரண்டியால் ஊற்ற வேண்டும். மேலே எழுப்பி வந்தவுடன் மறுபுறம் திருப்பி சிவந்து வெந்து எடுக்கவும்.

ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com