சூறாவளி பந்து வீச்சாளர்..!

வேகம் கொண்ட ஷப்னிம்: மகளிர் கிரிக்கெட்டில் புதிய உச்சம்!
சூறாவளி பந்து வீச்சாளர்..!
Picasa

மகளிர் கிரிக்கெட்டில் உலகிலேயே அதிவேகமாகப் பந்தை வீசி அனைவரையும் தன்னைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் ஷப்னிம் இஸ்மாயில். தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர் என்றாலும், மும்பை இந்தியன்ஸ் அணியில் அங்கமும் ஆவார். கடந்த ஆண்டு மே மாதத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகினார். வாரத்துக்கு சுமார் 20 ஆயிரம் டாலர் (ரூ.16 லட்சம்) ஊதியமாகப் பெற்று, மகளிர் கிரிக்கெட்டில் அதிக ஊதியம் பெறுவராக உள்ளார்.

அவர் கூறியதாவது:

'நான் தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரைச் சேர்ந்தவள். பள்ளியில் கிரிக்கெட் அணி இல்லாததால், கால்பந்தாட்டம் ஆடினேன. கிரிக்கெட் அணி தொடங்கியதும், அம்மா, தாத்தாவின் வற்புறுத்தலால் கிரிக்கெட் ஆட ஆரம்பித்தேன். மாணவர்களுடன் சேர்ந்துதான் கிரிக்கெட் ஆடினேன். சர்வதேச கிரிக்கெட், ஒருநாள் கிரிக்கெட், டி 20 , டெஸ்ட் போட்டிகள் என்று 241 போட்டிகளில் விளையாடி, 317 விக்கெட்களை வீழ்த்தியுள்ளேன்.

2016-இல் மேற்கு இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 128 கி.மீ. வேகத்தில் பந்து வீசி அதிவேக பந்து வீச்சாளர் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தேன். 2022-இல் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இரண்டு முறை 127 கி.மீ வேகத்தில் பந்து வீசினேன். எனது சாதனையை தானே முறியடிக்க எட்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டிவந்தது. 2024 மகளிர் ஐ.பி.எல். தொடரில் முதல் முறையாக 128.3 கி.மீ. வேகத்தில் பந்து வீசி தனது உலக சாதனையை முறியடித்தேன். தில்லி கேபிடல்ஸ் மகளிர் அணிக்கு எதிராக பந்து வீசியபோது 132.1 கிமீ வேகத்தில் பந்து வீசி, புதிய உலக சாதனையைப் படைத்தேன்.

என்னால் இந்திய அதிவேக பந்து வீச்சாளரான ஜுலன் கோஸ்வாமியைப் பின் தொடரவே முடிந்தது. அந்த ஜுலன் கோஸ்வாமிதான் இன்றைய மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணிக்கு பயிற்சியாளராக இருக்கிறார். எனக்கு 35 வயதாகிறது. கிரிக்கெட் வீராங்கனைக்கு இந்த வயது அதிகம்தான். ஆனாலும், பந்தினை அதி வேகமாக வீச வேண்டும் என்கிற முனைப்பு என்னை இயக்கிக் கொண்டிருக்கிறது.

"ஆண்ட்ரே நெல்' தான் எனது ரோல் மாடல் என்பதால், அவருடைய ஜெர்சி எண் ஆன "89' ஐ எனது ஜெர்சி எண்ணாகத் தேர்ந்தெடுத்தேன்' என்கிறார் ஷப்னிம் இஸ்மாயில்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com