மருத்துவக் குறிப்புகள்...

தலைமுடியை உறுதிப்படுத்தும் தேங்காய்ப் பால் சிகிச்சை
மருத்துவக் குறிப்புகள்...
Updated on
1 min read

வாரம் ஒருமுறை ஒரு மூடித் தேங்காயில் பால் எடுத்து தலையில் மயிர்க்காலில் படும்படி நன்றாகத் தேய்த்து, ஊறியவுடன் குளித்து வந்தால் தலைமுடி கொட்டாது.

வசம்பை சிறிது நீர்விட்டு மை போல் அரைத்துத் தலையில் தடவி வந்தால், அரை மணி நேரத்துக்குப் பின்னர் தலையை அலசினால் பேன்கள் மடியும்.

இஞ்சியைத் தோல் சீவி சுத்தம் செய்து சிறிது தனியா சேர்த்து அரைக்க வேண்டும். அவற்றை வெந்நீரில் கலந்து வடிகட்ட வேண்டும். தேன், எலுமிச்சைச் சாறுடன் வடிகட்டிய நீரைக் கலந்து குடிக்க அஜீரணம் நீங்கி, வயிறு பசி எடுக்கும்.

காய வைத்த வெந்தயத்தைப் பொடியாக்கி வைத்துகொள்ளுங்கள். ஒறு டம்ளர் காய்ச்சி ஆறிய தண்ணீரில் ஒரு தேக்கரண்டி பொடியைச் சேர்த்து கலக்கி, அருந்த வேண்டும். தினமும் குடித்தால் சர்க்கரை நோய் நீங்கும்.

தேனில் பேரீச்சம்பழங்களை ஊறவைத்து, இரவு படுக்கும் முன்பு சாப்பிட்டு பாலை அருந்தினால் நல்ல பசி எடுக்கும்.

இரவு உறக்கம் வராமல் தவிப்பவர்கள் ஒரு கிண்ணம் சூடான பாலில் சிறிதளவு தேன் கலந்து பருக, தூக்கம் வரும்.

இஞ்சியைத் துண்டுகளாக்கித் தேனில் ஊற வைத்து, சாப்பிட பித்தம் நீங்கும்.

வயிற்றில் கிருமி இருந்தால் வேப்பங்கொழுந்துடன் வெல்லம் சேர்த்துப் பச்சடி செய்து சாப்பிடலாம்.

முள்ளங்கிச் சாறு இரண்டு தேக்கரண்டி எடுத்து தேன் கலந்து சாப்பிட அனைத்து வகை சிறுநீர்க் கோளாறுகளும் சரியாகும்.

நெல்லிச் சாற்றை காலையில் வெறும் வயிற்றில் அருந்தினால், இன்சூலின் போடாமலேயே நீரிழிவு கட்டுப்படும்.

-ஆர்.ஜெ.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com