கோடைக்கு ஏற்ற பானங்கள்..

வெயிலின் தாக்கத்தை குறைக்கும் பாரம்பரிய குளிர்பானங்கள்
கோடைக்கு ஏற்ற பானங்கள்..

வெயிலின் தாக்கத்தை குளிர்பானங்களால் குறைக்க முடியும். அதிலும், பாரம்பரிய உணவில் புத்துணர்வு, சக்தி ஊட்டக் கூடிய ஆரோக்கியமான குளிர்பானங்கள் சிறப்பு வாய்ந்தவை.

மசாலா மோர்: தயிர், தண்ணீர், மசாலா பொருள்களைச் சேர்த்து நன்றாகக் கலந்து நுரையுடன் பரிமாறப்படும் சுவையான பானம். இது தாகத்தைத் தீர்ப்பதோடு உடல் சூட்டையும் தணிக்கும்.

லஸ்லி: தயிருடன் சர்க்கரை, தண்ணீர், சில நறுமணப் பொருள்கள் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. கால்சியம், வைட்டமின் பி 12, துத்தநாகம், புரோட்டீன் உள்ளிட்ட உடலுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துகள் அதிகமாகவே உள்ளன.

எலுமிச்சைச் சாறு: இது எளிதாகச் செய்யக் கூடிய பானமாகும். வைட்டமின் சி, பி மற்றும் தாது உப்புகள் நிறைந்த பானமாகும்.

சீரக நீர்: சீரகம், நீர், மிளகு, புதினா கலந்த பானம் பசியைத் தூண்டுவதோடு புத்துணர்வையும் அளிக்கும். புளிப்பு, கார சுவையுடையது.

கரும்புச் சாறு: கரும்புச் சாறுக்கு கோடைக்காலத்தில் நல்ல வரவேற்பு உண்டு. இது உடலுக்கு புத்துணர்வை அளிக்கும். மிகவும் விலை குறைந்த பானம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com