மருத்துவக் குறிப்புகள்....

வெறும் வயிற்றில் தேன் சாப்பிடும் நன்மைகள்
மருத்துவக் குறிப்புகள்....

மெலிதான உடல்தோற்றம் கொண்டவர்கள் தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் குளிர்ந்த நீரில் தேன் கலந்து சாப்பிட்டால், உடல் குண்டாகும்.

தினசரி தேன் சாப்பிட்டு வந்தால், நரம்புத் தளர்ச்சி மறையும். குரல் வளமாகும். ஆயுளும் அதிகரிக்கும்.

பாகற்காய் சாறோடு சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் சளி, காசநோய், ரத்தச் சோகை நீங்கும். குடல் புழுக்கள் அழியும்.

தொடர்ந்து 90 நாள்கள் இளநீர் குடித்துவந்தால் ரத்தம் சுத்தமாகும். தொடர்ந்து 40 நாள்கள் இளநீர் குடித்தால் நீர்க்கடுப்பு குணமாகும். மஞ்சள் காமாலை, சிறுநீர் தடை, அம்மை நோய்களுக்கு இளநீர் வரப்பிரசாதமாகும். உடல் உஷ்ணத்தையும் குறைக்கும். இதை வெறும் வயிற்றில் குடிப்பதே நல்ல பயன்களைத் தரும்.

மலை வாழைப்பழத்தைச் சாப்பிட்டால் சூட்டைத் தணிக்கும். பித்தத்தைப் போக்கும். மலச்சிக்கலை அகற்றும்.

வாழைப்பூவின் சாறைத் தயிருடன் கலந்து சாப்பிட்டால், ரத்தப் பேதி குணமாகும். கை, கால் எரிச்சல், இருமல், மூலம், மேக நோய்களைக் குணப்படுத்தும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com