தேவையான பொருள்கள்:
மைதா மாவு - 500 கிராம்
சர்க்கரை - 600 கிராம்
எண்ணெய் - 1/2 கிலோ
நெய் - சிறிதளவு
செய்முறை:
மைதா மாவைச் சலித்துத் தண்ணீர் விட்டுப் பூரி மாவு போல் பிசைந்து அப்பளமாக இடவும். இட்ட அப்பளத்தைச் சிறிதளவு நெய் தடவி ஒன்றன் மேல் ஒன்றாக 10-லிருந்து 12 வரை அடுக்கவும். பின் பொரித்து அவற்றைச் சுருட்டினால் குழாய் போல் அமைப்பு வரும்.
அவ்வாறு உருட்டியதை கத்தியால் சின்னச்சின்ன உருண்டையாக நறுக்கி, மீண்டும் அப்பளமாக இட்டு எண்ணெயில் போட்டுப் பொரித்துச் சர்க்கரைப் பாகில் முக்கி எடுத்து வைக்கவும். இந்த சிரோட்டி வட இந்தியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இனிப்பு வகையாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.