வழக்குரைஞர்கள் கருப்பு அங்கி அணிவது ஏன் தெரியுமா?
இங்கிலாந்தை ஆண்ட மேரி 694-இல் மறைவுற்றபோது, துக்கம் தெரிவிக்கும் வகையில் வழக்குரைஞர்கள் கருப்பு அங்கியை அணிய வேண்டும் என்று அவருடைய கணவர் உத்தரவிட்டார்.
அப்போது, வெள்ளைக் கழுத்துப்பட்டி அணியும் வழக்கம் இருக்கவில்லை. கருப்பு அங்கியில் முகத்தைப் பளிச்சென்று எடுத்துக் காட்டுவதற்காக, பின்னர் அணியத் தொடங்கினர். ஆங்கிலேயர்கள் ஆட்சி நடைபெற்ற நாடுகளில் இந்த வழக்கம் வந்துவிட்டது.
மார்ல்பரோ பிரபுவின் நினைவாக, நீதிபதிகள் ஒருவிதமான வெள்ளை விக் அணியும் வழக்கம் வந்தது. இந்தியாவில் தற்போது கைவிடப்பட்டது. இருப்பினும், வழக்குரைஞர்கள் அணியும் கருப்பு அங்கி நடைமுறை இப்போதும் தொடர்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.