
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் உலகளாவிய தொழில் துறை பத்திரிகையான 'பார்ச்சூன்' வெளியிட்ட 2024-ஆம் ஆண்டுக்கான ஆசிய தொழில்துறையின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில், அப்போலோ குழுமத்தின் துணைத் தலைவர் ப்ரீதா ரெட்டி இடம்பெற்றுள்ளார்.
இந்தப் பத்திரிகை ஆண்டுதோறும் உலகில் சிறந்த 500 நிறுவனங்கள், பல்வேறு வகைகளில் சிறந்த 100 பேர் பட்டியலை வெளியிடுகிறது. இந்தாண்டுக்கான சக்தி வாய்ந்த 100 பெண்கள் பட்டியலில், ப்ரீதா ரெட்டி 44-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். காலத்துக்கேற்ப நிறுவனங்களை மாற்றியமைத்து, புதுமையைப் புகுத்தி தொழில்துறை வளர்ச்சியை முன்னெடுக்கும் வகையிலான பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
அப்போலோ நிறுவனர் பிரதாப் ரெட்டியின் மூத்த மகளான ப்ரீதா ரெட்டி, ரூ.1 லட்சம் கோடி சந்தை மதிப்புள்ள குடும்ப நிறுவனத்தை டிஜிட்டல் மயமாக்கிவருகிறார். புதிய தொழில்நுட்பங்களில் அதிக முதலீடு செய்துள்ளார். அதன்வாயிலாக, ஊரகப் பகுதிகளுக்கு மருத்துவச் சேவை, ஆன்லைன் சிகிச்சை, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி நோய் கண்டறிதல், ரோபோடிக் முறையில் அறுவைச் சிகிச்சை போன்றவை சாத்தியமாகியுள்ளது.
இந்தப் பட்டியலில் சீன நாட்டைச் சேர்ந்த 20 பெண்கள், தாய்லாந்தைச் சேர்ந்த 14 பெண்கள், ஜப்பானைச் சேர்ந்த 9 பெண்கள், இந்தியாவில் இருந்து எட்டு பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஆண்களே அதிகம் கோலோச்சும் சுவரோவியம் கலைத் துறையில் பெண்களில் சிறந்து விளங்குபவராக அறியப்படுகிறார் லேடி பிங்க்.
அமெரிக்காவைச் சேர்ந்த இவர் தனது பதினாறு வயது முதல் சுவரோவியம் வரைய தொடங்கினார். இன்று பள்ளிச் சிறார்களுக்கு சுவரோவியம் கற்பிக்கும் ஆசிரியராக உள்ளார்.
'கலை என்பது கலைக் கூடங்கள், அருங்காட்சியகங்கள், அறைகளுக்குள் முடக்கப்பட்டு சிலருக்கு மட்டுமே ஏன் பயன்பட வேண்டும். எனது சுவரோவியங்கள் மக்களுக்கானது என்பதற்கான ஓவிய முயற்சி'' என்கிறார் லேடி பிங்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.