
நாகஜோதி கிருஷ்ணன்
அத்திப்பழத்தை ஒரு நாளைக்கு ஐந்து பழங்கள் வீதம் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டு வர பித்தத்தைக் குறைக்கும்.
வேப்பம் பூவுடன் மிளகு, சீரகம் சேர்த்து உண்டு வர பித்தப்பை நோய் குணமாகும்.
தினசரி ஒரு மாம்பழம் சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.
கோரைக்கிழங்குச் சூரணமானது ஒரு கிராம் காலை மாலை தேனில் உட்கொள்ள புத்தி கூர்மை உண்டாகும்.
அகத்திக்கீரை பித்தக் கோளாறுகளை நீக்கும்.
நெல்லி தைலம் வாரம் இருமுறை முழுகி வரப் பொடுகு தீரும்.
பிஞ்சு அவரைக்காய் சாப்பிட்டால் நீரிழிவு நோய் குணமாகும். வாழைத்தண்டை சமைத்து சாப்பிடும் நாள்களில் தயிர், மோர் சேர்க்காமல் இருப்பது நல்லது.
நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிட்டு வரவேண்டும்.