
சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பெண்கள் தாங்கள் அழகாகத் தோற்றமளிக்க, "மேக்- அப்' போடுகிறார்கள். இவற்றை சரியான முறையில் கையாள்வதன் மூலமே அழகாகத் தோற்றமளிக்க முடியும். முகத்துக்குப் போடும் ரூஜ்ஜை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?
கன்னங்களில் ரூஜ் தடவும்போது, கொஞ்சமாகத் தடவ வேண்டும்.
உப்பிய கன்னங்கள் உடையவராக இருந்தால், காதில் இருந்து முகவாய் வரை நல்ல நிறமுடைய பௌடரைத் தடவி அதன் மீது ரூஜ் தடவ வேண்டும்.
கண்ணாடி முன்பு புன்னகை புரியுங்கள். உப்பிய கன்னங்களை உடையவர்கள் எந்த இடம் குறைவாக உப்புகிறதோ, அதன் மீது ரூஜ் தடவுங்கள். அகலமான முகமுடையவர்கள் இரண்டு கன்னங்களிலும், ஒட்டிய கன்னமுடையவர்கள் எந்த கன்னம் அதிகமாக உப்புகிறதோ, அங்கும், சதுர வடிவ முகமுடையவர்கள் கன்னங்களின் மேல் பகுதியிலும், வட்ட முகமுடையவர்கள் கண்களுக்கு நேர்கீழாகவும், நீண்ட முகமுடையவர்கள் கன்னங்களின் மத்தியிலும் தடவலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.