கொண்டபள்ளி பொம்மைகள்...

ஆந்திராவில் ஆண்டுக்கு இருமுறை (சங்கராந்தி, நவராத்திரி) கொலு வைக்கப்படுகிறது. இதனை 'பொம்மலு கொலு' என்று அழைக்கின்றனர்.
கொலு பொம்மைகள்
கொலு பொம்மைகள்
Published on
Updated on
1 min read

ஆந்திராவில் ஆண்டுக்கு இருமுறை (சங்கராந்தி, நவராத்திரி) கொலு வைக்கப்படுகிறது. இதனை 'பொம்மலு கொலு' என்று அழைக்கின்றனர்.

ஆந்திராவின் என்.டி.ஆர். மாவட்டத்தில், விஜயவாடாவில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது கொண்டபள்ளி. இந்தப் பொம்மைகளுக்கு 2005-ஆம் ஆண்டு புவியியல் குறியீடு கிடைத்துவிட்டது. மென்மையான, பளிச் வண்ணங்கள், பல நூற்றாண்டு, பராம்பரிய முறைப்படி தயாரிக்கப்படுகின்றன.

இங்கு 16-ஆம் நூற்றாண்டில் இருந்து பொம்மைகள் செய்யப்பட்டு வருகின்றன. ராஜஸ்தானில் இருந்து 'சூர்ய சத்ரியர்' என்ற இன மக்கள் இங்கு குடியேறி காலம், காலமாகச் செய்து வருகின்றனர்.

'டெல்லா போனிகி' என்ற மென்மையான இந்த மரத்தில் இருந்து இவை செதுக்கப்படுகின்றன. இந்த மரம் செதுக்கல் வேலைகளுக்கு நன்கு ஒத்துழைக்கிறது.

கொலு பொம்மைகள்
கொலு பொம்மைகள்

அழகிய வடிவங்கள் உருவாக்கப்பட்டவுடன் மென்மையான மேற்பரப்பை உருவாக்க, மரத்தூள் மற்றும் புளியங்கொட்டை பேஸ்ட் பூசி காய வைக்கின்றனர். பிறகு காய்ந்ததும் பளிச்சிடும் வண்ணங்களைப் பூசுகின்றனர்.

இவர்கள் பொம்மைகளில் கிராம வாழ்க்கை பொம்மைகள், தெய்வங்கள் முக்கிய இடங்களைப் பிடிக்கின்றன. அம்பாரி யானை, பனை மரம், தசாவதார செட் (10), கிராமப்புற வாழ்க்கை (24) ஆகியன மிகப் பிரபலமானவை. விலங்குகளையும், மிக அழகாகச் செய்வர். உழைப்பு, திறமை, பொறுமை ஆகியவையே தொடர் வெற்றிக்கு காரணங்களாகும்.

இதேபோல், கர்நாடகத்தில் பெங்களூரில் இருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள சென்னபட்னாவிலும் மரப் பொம்மைகளுக்குப் பிரபலம். இவர்கள் ஐவரி (பிலாசா) மரத்தைப் பயன்படுத்துகின்றனர். இவர்கள் வேலைகளில் அரக்குக்கு முக்கிய இடம் உண்டு.

வாரணாசி சிக்கலான காகித மேச் பொம்மைகளுக்கு பிரபலம். அதேநேரம் களிமண் பொம்மைகளுக்கும் பிரபலம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com