தேவையான பொருள்கள் :
ரஸ்க் ஸ்லைஸ் - 6
சர்க்கரை - 1 கிண்ணம்
தேங்காய் துருவல் - 1/2 கிண்ணம்
முத்திரிப்பருப்பு - 10
ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
நெய் - 1 மேசைக்கரண்டி
செய்முறை:
ரஸ்க்கை மிக்ஸியில் பொடிக்கவும். சர்க்கரையையும் பொடிக்கவும், இரண்டையும் ஒன்றாகக் கலந்து, அதனுடன் தேங்காய் துருவலையும் சேர்க்கவும். முந்திரியை உடைத்து ஒடித்து ஏலக்காயைப் பொடிசெய்து போடவும். எல்லாவற்றையும் கலந்து, நெய்யைச் சுடவைத்து ஊற்றி, உருண்டைகளாகப் பிடிக்கவும்.