தேவையான பொருள்கள்:
ஈர அரசி மா, வெல்லம்- தலா 200 கிராம்
உளுத்தம் பருப்பு- 1 மேசைக் கரண்டி
வெள்ளை எள்- 1 தேக்கரண்டி
ஏலக்காய்- 4
நெய்- 50 கிராம்
எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை:
தேவையான அளவு பச்சரிசியை தண்ணீரில் சுமார் அரை மணி நேரம் ஊறவைத்து, வடியவிட வேண்டும். பின்னர், நிழலில் உலர்த்தி காய வைத்து மெஷினில் அரைத்து வைத்துகொள்ள வேண்டும். அரைத்த மாவை மறுபடியும் ஆறவைத்து எடுத்துகொள்ள வேண்டும்.
ஒரு வாணலியில் அரை டம்ளர் உளுத்தம் பருப்பை சிவக்க வறுத்து, பொடி செய்து சலித்து வைத்துகொள்ள வேண்டும். ஒரு வாணலியில் ஈர அரிசி மாவை லேசாக வறுத்துகொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் அரை டம்பளர் தண்ணீரில் வெல்லத்தை போட்டு கரைய விட வேண்டும்.
வெல்லம் கரைந்தவுடன் தண்ணீரை வடிகட்டி கல் மண்ணை நீக்கி வடிகட்டிய தண்ணீரை மறுபடியும் அடுப்பில் வைத்து காய்ச்ச வேண்டும். வெல்லம் கரைந்து அடுத்த நிலைக்கு வரும்போது, இறக்கி நன்றாக நன்றாக ஆறவிட வேண்டும்.
நன்றாக ஆறிய வெல்லத் தண்ணீரை வறுத்தடுத்த அரிசி மாவில் சிறிது, சிறிதாகச் சேர்த்து உருட்டுப் பதத்தில் வரும்போது எள், உளுத்தம் பருப்பு, நெய் சேர்க்க வேண்டும். மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி பத்து நிமிடங்கள் அப்படியே வைக்க வேண்டும். மிதமான தீயில் எண்ணெய் சூடாக்கி, கொஞ்சம், கொஞ்சமாக உருண்டைகளைப் போட்டு சிவந்ததும் பொரித்து எடுக்க வேண்டும்.