தேவையான பொருள்கள்:
பெரிய வெங்காயம், பெரிய வாழைக்காய்-தலா 2
பச்சை மிளகாய்-3
பூண்டு- 4 பற்கள்
பெருங்காயத் தூள்- அரை தேக்கரண்டி
எலுமிச்சைச் சாறு- 1 மேசைக்கரண்டி
எண்ணெய்- 2 தேக்கரண்டி
கடுகு- அரை மேசைக்கரண்டி
தேங்காய்த் துருவல் - 2 மேசைக்கரண்டி
உப்பு, கறிவேப்பிலை - தேவையான அளவு
செய்முறை:
வாழைக்காயைத் தோலுடன் மூன்று துண்டுகளாக நறுக்கி சிறிது உப்பு சேர்த்து அரை வேக்காடு பதத்தில் வேக வைத்து, தோலை உரித்தெடுக்க வேண்டும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.
இதனுடன் பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து வேக வைத்த வாழைக்காயை கேரட் துருவியில் துருவி சேர்த்து மேலும் வதக்கி எல்லாவற்றையும் ஒருமுறை புரட்டி தேங்காய்த் துருவலையும் சேர்த்து வதக்கி இறக்கி, எலுமிச்சைச் சாறு பிழிந்து நன்றாகக் கலந்துவிட வேண்டும்.