
உலக மகா சக்ரவர்த்தியான சாலமன் தனது பாலஸ்தீன நாட்டில் எழுப்பியிருந்த எழில் மாளிகையான கண்ணாடிப் பேழையில் உருவாக்கிய அரண்மனை இன்றும் காண்போரின் கண்களைக் கவர்கின்றன.
சாலமனின் அரண்மனைக்குள் யேமன் நாட்டு எழிலரசி பல்கீஸ் நுழைகிறாள். காலடி எடுத்து வைத்ததும், காலுக்குக் கீழே தண்ணீர் ஓடுவதைப் பார்த்து உடனடியாகத் தம் கரண்டைக் காலுக்குக் கீழே தொங்கிய பொன்னாடையை தன் முழங்கால் அளவுக்குத் தூக்கிப் பிடிக்கிறார். ஆடை நனையாமல் இருக்க, அரசி அவ்வாறு செய்தார்.
பல்கீஸ் அரசியின் காலைப் பார்த்து சாலமன் மையல் கொண்டு, 'அரசியாரே. உங்கள் காலடியில் தண்ணீர்
ஓடவில்லை. தண்ணீர் ஓடைபோன்று உருவாக்கி, கண்ணாடியில் இந்த அரண்மனையை எழுப்பி இருக்கிறோம்'' என்றார்.
சாலமன் கூறியதைக் கேட்ட பல்கீஸ் வெட்கமுற்று, தனது பொன்னாடையை மீண்டும் இறக்கிவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.