தேவையான பொருள்கள்:
சிறிய வாழைப்பூ- 1
சின்ன வெங்காயம்- 50 கிராம்
பச்சை மிளகாய், மிளகாய் வற்றல்- தலா 4
உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு, தேங்காய்த் துருவல்- தலா 1 மேசைக்கரண்டி
புளி, உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
கொத்தமல்லி, கறிவேப்பிலை- 1 பிடி
செய்முறை:
வாழைப்பூவில் நரம்புகளை நீக்கி பொடியாக நறுக்கி மோர் கலந்த நீரில் போட வேண்டும். வாணலியில் எண்ணெய்விட்டு அடுப்பில் வைத்து காய்ந்ததும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் போட்டு வதக்கி எடுக்கவும்.
கடுகு, உளுந்தம் பருப்பு, மிளகாய் வற்றல், கடலைப் பருப்பு போட்டு தாளித்து வாழைப்பூவை சேர்த்து வதக்கி, எல்லாவற்றையும் சேர்த்து உப்பு, புளி, கொத்தமல்லி, கறிவேப்பிலையைக் கலந்து அரைத்தெடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.