தேவையான பொருள்கள்:
கத்தரிக்காய்- 600 கிராம்
தேங்காய்- 1 மூடி
தனியா- 4 தேக்கரண்டி
கசகசா- 2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம்- 5
பச்சை மிளகாய்- 10
மசாலாப் பொடி- 4 தேக்கரண்டி
பூண்டு- பத்து பற்கள்
இஞ்சி- 1 சிறிய துண்டு
தயிர்- 300 மில்லி
கொத்தமல்லி- 1 கட்டு
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை:
கத்தரிக்காய்களை நான்கு துண்டுகளாக வெட்ட வேண்டும். இரண்டு வெங்காயம், பச்சை மிளகாய், துருவிய தேங்காய், தனியா, கசகசா, பூண்டு, இஞ்சி ஆகியவற்றைச் சிறிதளவு எண்ணெயை வாணலியில் விட்டு, வறுத்து விழுதாக அரைக்க வேண்டும். வாணலியில் எண்ணெய்விட்டு கத்தரிக்காயை வதக்கி எடுத்து ஆற வைக்க வேண்டும்.
பின்னர், அரைத்த விழுதை அதில் அடைத்துகொள்ள வேண்டும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு மசாலாப் பொடி போட்டு தாளித்து நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து, பொன்னிறமாக வதக்க வேண்டும். கத்தரிக்காய் வெந்தவுடன் நறுக்கிய கொத்தமல்லியுடன் புளிப்பில்லாத தயிரைச்சேர்த்து, கலக்கி கீழே இறக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.