அனைவரும் விரும்பிச் சாப்பிடும் பழங்களில் ஒன்று திராட்சை. மகாராஷ்டிரத்தில் உள்ள நாசிக் பகுதியில் அதிக அளவில் திராட்சை உற்பத்தி செய்யப்படுகிறது. ஆறு பழங்கள் முதல் முந்நூறு பழங்கள் வரையிலான திராட்சைக் கொத்துகள் இருக்கின்றன.
அவை சிவப்பு, கருப்பு, பச்சை, இளம் நீலம், இளஞ்சிவப்பு உள்ளிட்ட பல நிறங்களில் உள்ளன. சிவப்பு திராட்சைகள் இதய நோய், நரம்பு நோய்களைக் குணமாக்கும் திறன் உடையது.
குஜராத்தின் பாரம்பரிய அரிசி மாவு- சிற்றுண்டி. வாழை இலைகளை வட்ட வட்ட வடிவில் கத்தரித்து அரிசி மாவு, உளுந்து மாவு, தயிர், சீரகம், எண்ணெய், உப்பு உள்ளிட்டவற்றுடன் தண்ணீர் கலந்து, இரு இலைகளுக்கு இடையே தோசை போல் பரப்பி வேக வைக்கும் உணவு முறையாகும். வாழை இலையில் வேக வைக்கப்படும் இந்தச் சிற்றுண்டி தனித்துவமான ருசியை அளிக்கும்.
உலகில் "கப் நூடுல்ஸ்' உணவு முதன்முதலில் தோன்றிய பகுதி ஒசாகா. கிழக்காசிய நாடான ஜப்பானில் உள்ளது. இதற்காக, அருங்காட்சியகமும் உள்ளது. இங்கு விதவிதமான கப் நூடுல்ஸ் உண்ணக் கிடைக்கும். அத்துடன் பிடித்தமான கப் நூடுல்ஸ்களை தயாரித்து சுவைக்கும் வசதி உண்டு. இங்கே 800-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் உள்ளன.
கோட்டாறு ஆ.கோலப்பன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.