தேவையான பொருள்கள்:
கேரட்- 4
பீன்ஸ்- 10
பாசிப் பருப்பு- 500 கிராம்
சீரகம்- 2 மேசைக்கரண்டி
இஞ்சி- 1 சிறிய துண்டு
வெங்காயம்- 250 கிராம்
பச்சை மிளகாய்- 12
கொத்தமல்லி, பச்சைப் பட்டாணி, துருவிய கோஸ், உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை:
பாசிப்பருப்பை தண்ணீரில் ஊற வைக்கவும். ஊறியதும் நறுக்கிய பச்சை மிளகாய், தோல் நீக்கி துருவிய இஞ்சி, உப்பு சேர்த்து அரைக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு நறுக்கிய வெங்காயம், சீரகம், கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து வதக்கி, மாவில் கொட்டி நன்றாகக் கலக்கவும்.
பின்னர், பொடியாக நறுக்கிய பீன்ஸ், கேரட், பட்டாணி, கோஸ் ஆகியவற்றை லேசாக எண்ணெய்விட்டு வதக்கிக் கொள்ளவும். தோசைக் கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் எண்ணெய்விட்டு மாவை தோசையாக ஊற்றி, அதன் மீது காய்கறி கலவையைப் பரப்பி மூடி போட்டு மூடவும். நன்றாக வெந்தவுடன் எடுக்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.