சுண்டைக்காய்- 100 கிராம்
துவரம் பருப்பு- 50 கிராம்
வெங்காயம்- 1
தக்காளி, பச்சை மிளகாய்- தலா 2
சாம்பார் பொடி- 1 மேசைக்கரண்டி
புளி- 1 உருண்டை
கடுகு, உளுந்தம் பருப்பு- தலா அரை மேசைக்கரண்டி
உப்பு, எண்ணெய்- சிறிதளவு
செய்முறை:
சுண்டைக்காயைக் கழுவி காம்பை எடுத்துப் பொடியாக நறுக்க வேண்டும். துவரம் பருப்பை முக்கால் பதமாக வேக வைத்து எடுக்க வேண்டும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நறுக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பைப் போட்டு பொரிந்தவுடன் பச்சை மிளகாய், வெங்காயம், வதக்க வேண்டும்.
வெங்காயம் வதங்கியதும் சுண்டைக்காய், தக்காளி போட்டு வதக்கி வேக வைக்க வேண்டும். பருப்பு, சாம்பார் பொடி, உப்பு சேர்த்துப் புளியைக் கரைத்து ஊற்ற வேண்டும். பச்சடி தண்ணியாக இல்லாமல் சிறிது கெட்டியானவுடன் கீழே இறக்க வேண்டும். சுண்டைக்காய் உடலுக்கு நல்லது. கசப்பு சிறிது இருந்தாலும் பச்சடியாகச் சாப்பிடும்போது சுவையாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.