வீட்டுக் குறிப்புகள்...

வாய்க்கு ருசி தெரியவில்லை எனில், நார்த்தாங்காயை மென்றுவிட்டு சாப்பிட்டால் ருசி அறிவோம்.
முட்டைகோஸ்
முட்டைகோஸ்
Published on
Updated on
1 min read

விமலா சடையப்பன்

வாய்க்கு ருசி தெரியவில்லை எனில், நார்த்தாங்காயை மென்றுவிட்டு சாப்பிட்டால் ருசி அறிவோம்.

தட்டை செய்யும்போது, மைதாவுக்குப் பதில் கோதுமை மாவை ஆவியில் வேக வைத்துச் செய்தால், ருசி இருக்கும்.

நீரில் வெற்றிலையைக் கொதிக்க வைத்து, தினமும் பருகினால் நோய்த் தொற்றுகள் அண்டாது.

மோரில் ஊறவைத்த வாழைப்பூவை நெய்விட்டு வதக்கி, துவையல் அரைத்தால் சுவையாக இருக்கும்.

கேழ்வரகு மாவுடன் சிறிது வேர்க்கடலையைச் சேர்த்து, பகோடா செய்தால் நல்ல சுவையுடன் மொறுமொறுவென்று இருக்கும்.

வேப்பெண்ணெயை பூசினால் அரிப்பு ஏற்படாது.

சந்தன எண்ணெயை நெஞ்சில் பூசிவர மூச்சுத்திணறல் சரியாகும்.

முட்டைகோஸூடன் வெண்ணெய் கலந்து பாயசம் செய்து அருந்தினால் உடல் தளர்ச்சி விலகும்.

பச்சை வெங்காயத்தைச் சாப்பிட்டு, சுடுநீர் குடித்தால் ஜலதோஷம் விலகும்.

இஞ்சிச் சாறு, சீரகம், மிளகுத் தூள் சேர்ந்துச் சாப்பிட்டால், புளித்த ஏப்பம் சரியாகும்.

 வெந்நீருடன் வெங்காயச் சாற்றை கலந்து வாய் கொப்பளித்தால், பல் வலி குறையும்.

காலை உணவுக்கு அரை மணி நேரம் முன்பு தோல் நீக்கிய இஞ்சித் துண்டை சாப்பிட்டால் கொழுப்பும், தொப்பையும் குறையும்.

புங்கன் இலையை ஆமணக்கு எண்ணெயில் வதக்கி, வீக்கம் உள்ள இடத்தில் கட்டினால் வீக்கம் குறையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com