பட்டு, பருத்திப் புடவைகளில் பல ரகங்கள் உண்டு. நவீன காலத்தில் லெஹங்கா போன்றவையும் அசத்துகின்றன. மற்றொரு வகை மார்டன் ரகம் டூப்பியான் புடவைகள். பருத்தி, பட்டு, சணல், லினென் எனப் பலவற்றில் புடவைகள் வருகின்றன. அதுதவிர மாநிலத்துக்கு மாநிலம் நெசவுப் பாணிகள், வடிவமைப்பு, அலங்காரங்களை மாற்றி, ஜரிகை, எம்பிராய்டரியை இணைத்து அசத்துகின்றனர்.
இந்த வகையில் காஞ்சி பட்டு, பனாரஸ் பட்டு உள்ளிட்ட பல ரகமான புடவைகளும் பெண்களைக் கவருகின்றன. இருந்தாலும் பெண்களின் கண்களில் மறைந்திருக்கும் சில புடவைகளும் உண்டு. அவற்றில் சில:
சிகோ புடவை (ஆந்திரம், தெலங்கானா): பட்டும், பருத்தியும் சேர்த்து இணைத்து நெய்யும் இந்தப் பட்டுப் புடவையின் நேர்த்தியும் பருத்தியின் காற்றோட்டமும் பெண்களைக் கவரும். வெயில் காலத்திலும் உடுத்துவதற்கு உகந்தது.
கரட் புடவை (மேற்கு வங்கம்): தூய பட்டினால் வெள்ளை வண்ணம், சிவப்பு எல்லைகள் இதன் சிறப்புஅழகு. பாலிவுட் துர்கா பூஜை காட்சிகளில் இது நிச்சயம் இடம் பெற்றிருக்கும்.
மோலாக்கலாமூறு புடவை (கர்நாடகா): மயில்கள், கோபுரங்கள், பாரம்பரியத் தாவரங்கள் உள்ளிட்டவை நேர்த்தியுடன் வரையப்பட்டிருக்கும். துடிப்பான கைத்திறன் மிக்கவை. பார்ப்போரை கேட்க வைக்கும் புடவை.
கோட்டா டோரியா புடவை (ராஜஸ்தான்): 'காட்ஸ்' எனப்படும் சிறிய சதுர வடிவங்களால் நெய்யப் பட்டவை. லேசானது. குளிர்ச்சியானது. ஆனால், உறுதியானவை. கோடைக்காலத்துக்கு மிகவும் ஏற்றது.
துஸ்ஸார் கிச்சா புடவை (ஜார்கண்ட்): துஸ்ஸார் பட்டு நூலையும், அதன் கழிவுகளிலிருந்து தயாரிக்கப்பட்ட கிச்சா நூலையும் சேர்த்து உருவாக்கப்படுவது. கரடுமுரடான அமைப்பையும் இயற்கையான பழமையான தோற்றத்தையும் கொண்டது. தங்க நிறத்தில் மென்மையான தன்மையுடனும் இறுக்காத தன்மை இல்லாமலும் இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.