கட்டடவியலில் முதல் பெண் பொறியாளர்

மும்பை விக்டோரியா ஜூப்ளி டெக்னிக்கல் இன்ஸ்டிட்யூட்டில் 1953- ஆம் ஆண்டில் கட்டடவியலில் பொறியியல் பட்டம் பெற்ற சகுந்தலா, 'நாட்டின் முதல் பெண் கட்டடவியல் பொறியாளர்' என்ற பெயரைப் பெற்றவர்.
கட்டடவியலில் முதல் பெண் பொறியாளர்
Updated on
1 min read

மும்பை விக்டோரியா ஜூப்ளி டெக்னிக்கல் இன்ஸ்டிட்யூட்டில் (தற்போது வீரமாதா ஜீஜாபாய் தொழில்நுட்பக் கல்லூரி) 1953- ஆம் ஆண்டில் கட்டடவியலில் பொறியியல் பட்டம் பெற்ற சகுந்தலா, 'நாட்டின் முதல் பெண் கட்டடவியல் பொறியாளர்' என்ற பெயரைப் பெற்றவர்.

அதற்கடுத்த பத்து ஆண்டுகள் கழித்து, இவர் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் கட்டடவியல், கட்டமைப்பு பொறியியலில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

1960 முதல் 1970 வரை மும்பை ஐ.ஐ.டி. யில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றினார். 1968-இல் இவரும், இவரது கணவர் பகத்தும் இணைந்து 'குவாட்ரிகான்' எனும் பாலங்கள் கட்டுமான நிறுவனத்தைத் தொடங்கி, நூற்றுக்கணக்கான பாலங்களைக் கட்டி முடித்தனர்.

இதோடு, சகுந்தலா அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட வெளிநாடுகளிலும் பல்வேறு பால வடிவமைப்பு, கட்டுமானங்களில் பணிபுரிந்தார். அதே சமயம் காங்கிரீட் ஆய்விலும் ஈடுபட்டார் .

வெல்டிங், ரிவெட்டிங்கையே நம்பியிருந்த நிலையில், இதற்கு மாற்றாக யூனிஷியர் கனெக்டரை கண்டுபிடித்தார் சகுந்தலா. இது எஃகு பாகங்களை சுத்தமான, புத்திசாலியான துல்லியத்துடன் ஒன்றாகப் பூட்டக்கூடிய கட்டமைப்பாகும். இதற்கு கண்டுபிடிப்பு மேம்பாட்டு வாரியத்தின் மிக உயர்ந்த கெளரவமும் கிடைத்தது.

ஹிமாசலப் பிரதேசத்தின் ஸ்பிடியில் இரண்டு மட்டு பாலங்களை (மாடுலர் டிசைன்) வெறும் நான்கு மாதங்களில் கட்டி முடித்தார். 1993-இல் சிறந்த பெண்மணி என்ற விருதைப் பெற்ற இவர், 2012-இல் மறைவுற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com