

உலக அளவில் அரிசி, கோதுமைக்கு அடுத்து மூன்றாவது பயிரான உருளைக்கிழங்கின் தாயகம் பெரு. இங்குள்ள இன்கா இன மக்களால் கி.மு. 8-5-ஆம் நூற்றாண்டிலேயே உருளைக்கிழங்கு பயிரிடப்பட்டது.
தென் அமெரிக்காவில் ஆண்டியன் பகுதியில் உயரமான இடத்தில் மஞ்சள், வெளிர், ஊதா உள்பட பல வண்ணங்களில் உருளைக்கிழங்கு பயிரிடப்படுகிறது. இதில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான வகைகள் இங்கே உற்பத்தியாகிறது.
ஸ்பானியர்கள்தான் உருளைக்கிழங்கை ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தினர். ஐரோப்பாவில் முக்கியப் பயிரான உருளையை வணிகர்கள் சீனா, இந்தியா உள்பட பல நாடுகளிலும் கொண்டு சென்றனர். தற்போது 125 நாடுகளில் இது பயிரிடப்படுகிறது.
பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் சி உள்ளிட்டவை அதிகம் கொண்டது. ஆனால், சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். சோடியம் அளவை சம நிலையில் வைத்திருந்து ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். நார்ச்சத்து கொழுப்பைக் குறைக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.