கோலத்தின் மகிமை...

கோலம் போடுவதால் அதிகாலை காற்றைச் சுவாசித்து ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளமுடியும்.
கோலத்தின் மகிமை...
Updated on
1 min read

கோலம் போடுவதால் அதிகாலை காற்றைச் சுவாசித்து ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளமுடியும். கோலத்தின் ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கத்துக்கு வைக்கும் புள்ளி, அதை இணைக்கும் கோடுகள், டிசைனை போடும்போது பெண்களின் சிந்தனை ஒருநிலைப்படுவதோடு, கவனக் குவிப்பும் அதிகரித்து, ஞாபகத் திறன் மேம்படுகிறது. கண்பார்வை கூர்மையாக உதவுகிறது. கால்களுக்கு வலுவைத் தந்து, ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

ஓசோன் காற்றால் சுவாசப் பாதையைத் தூய்மையாக்கி, உடல்நலன் நன்றாக இருக்க உதவுகிறது. பசு சாணத்தால் வாசல் தெளிக்கும்போது, மணமாக இருப்பதுடன் கிருமி தொற்றையும் தடுக்கிறது. வாசலில் கோலமிடுவதைப் போன்று பூஜை அறையில் போடும் மூன்று விதமான கோலங்களால் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும்.

ஐஸ்வர்ய கோலம்: இந்தக் கோலத்தை பச்சரிசி மாவில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பூஜை அறையில் போட, லட்சுமி கடாட்சம் அதிகரித்து, சகல ஐஸ்வர்யங்களையும் தரும்.

ஹ்ருதய கமல கோலம்: அஷ்ட ஐஸ்வர்யத்தையும், செல்வத்தையும் பெருக்கக்கூடியது. இந்தக் கோலத்தை ஆரம்பத்தில் போட கஷ்டமாக இருந்தாலும், பழகினால் எளிதாகிவிடும். இதை வாசலில் போடாமல், பூஜை அறையில் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே போட வேண்டும்.

லட்சுமி குபேர கோலம்: விசேஷமான இந்தக் கோலத்தையும் பூஜை அறையில் போட, அதிக அளவில் பலன்களைப் பெறலாம். செல்வ வளத்தை அள்ளித் தரும் இந்தக் கோலத்தை செவ்வாய், வெள்ளிக்கிழமை, முக்கிய நாள்களில் போட்டு பூக்களால் அலங்கரிக்கச் சிறப்பான பலன்களைப் பெறலாம். மார்கழி மாதத்தில் அதிகாலையில் வாசலில் கோலமிட்டு பின்னர் அகல்விளக்கேற்றி வைக்க, ஐஸ்வர்யம் பெருகும். இல்லம் சிறக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com