

தேவையான பொருள்கள்:
கோதுமை மாவு - 4 கிண்ணம்
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
அரிசி மாவு - 1 கிண்ணம்
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
எண்ணெய், உப்பு - தேவைக்கு
பச்சை மிளகாய் - 3
கொத்துமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
டால்டா - 3 தேக்கரண்டி
செய்முறை:
கோதுமை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், தேவையான உப்பு ஆகியவற்றை ஒன்றாகப் போட்டு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்துமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றையும் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.
டால்டாவைச் சுடவைத்து மாவில் ஊற்றி பக்கோடா மாவு பதத்துக்குப் பிசைந்து கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் மாவை பக்கோடாக்களாகக் கிள்ளிப்போட்டுச் சிவக்க வெந்ததும் எடுக்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.