

ஏ.டி.எம். அட்டை பயன்படுத்துவோர் சில விஷயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும்.
ரகசிய எண்ணை மனதில் பதிய வைத்துக் கொள்ளவேண்டும். எக்காரணம் கொண்டும் அட்டையின் மீது எண்ணை எழுதி வைக்கக்கூடாது.
பிறரிடம் அட்டையைக் கொடுத்துவிட்டு, பணம் எடுத்துவருவதைத் தவிர்க்கவேண்டும். துணைக்கு யாரையும் அழைத்துச் செல்வதும் கூடாது.
அருகில் இருப்பவர்கள் அறியாதவகையில் ரகசிய எண்ணை இயந்திரத்தில் பதிவிட வேண்டும். எண்களை அவ்வப்போது மாற்றுவதும் நல்லது.
சில ஏ.டி.எம்.களில் அட்டையைச் செலுத்தி, ரகசிய எண்ணை அழுத்தி, உடனே அட்டையை எடுத்துவிட வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத இடங்களில் உள்ள ஏ.டி.எம்.களைப் பயன்படுத்தக் கூடாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.