தேவையான பொருள்கள்:
வெண்ணெய், கோதுமை மாவு- தலா 400 கிராம்
சர்க்கரை பௌடர்- 300 கிராம்
உலர் திராட்சை, பாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பு, செர்ரீ, கன்டன்ஸ்டு மில்க், வறுத்த வேர்க்கடலை- தலா 100 கிராம்
முட்டை- 5
பேக்கிங் பௌடர், கஸ்டர்டு பௌடர்- தலா 2 மேசைக்கரண்டி
செய்முறை:
பாதாம் பருப்பைத் தோல் நீக்கி பருப்புகளையும், பழங்களையும் சிறிது சூடாக்கிக் கொள்ள வேண்டும். கோதுமை மாவு, பேக்கிங் பௌடர், கஸ்டர்டு பௌடர் மூன்றையும் சலித்துக் கொள்ள வேண்டும்.
வெண்ணெயை நன்றாக நுரைக்க அடித்துக் கொண்டு, அதில் சர்க்கரையையும் சேர்த்து அடிக்க வேண்டும். முட்டையின் இரண்டு கருவையும் தனியாகப் பிரித்து இரண்டையும் சேர்த்து அடித்து, கன்டன்ஸ்டு மில்க், எசனஸ் கலந்து, வெண்ணெய்க் கலவையும் சேர்த்து கோதுமை மாவைச் சேர்த்த கலவையை கொஞ்சம், கொஞ்சமாகக் கலந்து பழத் துண்டுகள் எல்லாவற்றையும் கலந்து, தகர ட்ரேயில் நெய் அல்லது வெண்ணெய் தடவி, கேக் கலவையை ஊற்றி, அடுப்பில் அல்லது அவனில் வைத்து, ஒரு மணி நேரம் வேக வைத்து எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.