தேவையான பொருள்கள்:
கேழ்வரகு மாவு, வெண்ணெய், சர்க்கரை பௌடர்- தலா 400 கிராம்
சோள மாவு- 300 கிராம்
பேக்கிங் பௌடர், வெனிலா எசன்ஸ், கோல்டன் சிரப், சமையல் சோடா- தலா 2 மேசைக்கரண்டி
முட்டை- 6
செய்முறை:
கேழ்வரகு மாவு, சோள மாவு, பேக்கிங் பௌடர், சமையல் சோடா ஆகியவற்றை நன்றாகச் சலித்துக் கொள்ள வேண்டும். முட்டைகளை நுரைக்க அடிக்க வேண்டும்.
வெண்ணெயை கிரீம் போல அடித்துக் கொண்டு, அதில் சர்க்கரை பௌடரை தூவி அடித்துக் கொள்ள வேண்டும். வெண்ணெய் கலவையோடு முட்டைக் கலவையைச் சேர்த்து அடிக்க வேண்டும்.
அதில் கோல்டன் சிரப், வெனிலாவையும் சேர்த்து அடித்துக் கொண்டு, மாவுக்கலவையை கொஞ்சம், கொஞ்சமாகச் சேர்த்து நன்கு கலவையிட வேண்டும். தகர ட்ரேயில் வெண்ணெய் தடவி, கலவையை ஊற்றி, அடுப்பில் ஏற்றி ஒரு மணி நேரம் வேகவைத்து எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.