வால்மிளகுத் தாவரம் மணமூட்டும் தாவரமாகும். திப்பிலி, வெற்றிலை, நல்ல மிளகு ஆகியவை ஒரே வகையைச் சார்ந்தவை. மிளகைப் போல் நிறத்திலும், உருவத்திலும் காணப்படும் இதன் வால் பகுதி மட்டும் சிறிது நீண்டு காணப்படும். இதன் காய், விதை இலை, வேர் அனைத்தும் மருத்துவப் பயன்களைக் கொண்டதாகும். இலங்கை, மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும், இந்தியாவில் அஸ்ஸாம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள மலைப்பகுதிகளில் மரமேறும் கொடியாக வளர்கிறது.
சில வால்மிளகை நெய்யில் வறுத்துப் பொடியாக்கி, தேனில் குழைத்து உண்ண தொண்டை வலி, தொண்டைக் கரகரப்பு, இருமல் குணமாகும்.
கொடி இலைகளை நீரிலிட்டு காய்த்து, இந்த நீரில் வாய் கொப்பளித்தால் தொண்டை வலி குணமாகும்.
சில வால்மிளகுகளுடன் ஒரு துண்டு சுக்கு, பன்னீர் விட்டு அரைத்து நெற்றிப் பொட்டில் பூசிட, தலைவலி தீரும்.
வால்மிளகை நீரில் போட்டு காய்த்து, வடிகட்டி இதோடு தேவையான இனிப்பு, பால் சேர்த்து அருந்த இருமல் தீரும்.
வால்மிளகுத் தூளை நெய்யில் குழைத்து உண்ண, வறட்டு இருமல் மாறும்.
பாலில் சிறிதளவு மஞ்சள் பொடி, வால்மிளகுப் பொடி கலந்து அருந்திட இருமல், தொண்டை வலி, சளித் தொல்லைகள் தீரும்.
குரல் வளம் பெற வால்மிளகுத் தூளை அடிக்கடி தேனில் குழைத்து உண்ணலாம்.
உடலுக்கு வெப்பத்தை அளிப்பதோடு, கபத்தை வெளியேற்றும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.