பாட்டி வைத்தியம்

தேங்காய்ப் பாலும் பாதாம் பருப்பும் ஞாபகச் சக்தியை வளப்படுத்தும்.
பாட்டி வைத்தியம்
SWAMINATHAN
Updated on
1 min read

* தேங்காய்ப் பாலும் பாதாம் பருப்பும் ஞாபகச் சக்தியை வளப்படுத்தும்.

* லவங்கப்பட்டை, சுக்கு இரண்டையும் பொடி செய்து, தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்துக் கஷாயம் தயாரித்து, காலை, மாலை இரு வேளையும் குடித்து வந்தால், ஞாபகச் சக்தி அதிகரிக்கும்.

* இரவில் குளிர்ந்த நீரில் வில்வ இலைகளைப் போட்டு மூடி வைத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் அந்த நீரை மட்டும் எடுத்துக் குடித்து வந்தால், மூளை பலம் அடையும். புத்திக் கூர்மையும், ஞாபகச் சக்தியும் ஏற்படும்.

* வல்லாரைக் கீரையை பருப்புடன் சேர்த்துக் கடைந்து சாப்பிட்டால் ஞாபகச் சக்தி வந்துவிடும்.

* தாமரைப் பூவை நீரில் காய்ச்சி காலையிலும், மாலையிலும் அருந்தி வந்தால் ஞாபகச் சக்தி பலப்படும்.

-முக்கிமலை நஞ்சன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com