

ஆண்களைவிட பெண்களுக்கு அதிகமாக இரும்புச் சத்தானது தேவைப்படுகிறது. முக்கியமாக, மாதவிடாய் நேரத்திலும், கர்ப்பிணியாக இருக்கும்போதும் அவர்களுக்கு இரும்புச் சத்து இரு மடங்காகத் தேவைப்படும்.
உதாரணமாக, ஒரு நாளைக்கு 8 மில்லி அளவுக்கு இருந்தால், மேற்கண்ட காலகட்டத்தில் அது 18 மில்லியாகத் தேவைப்படும்.
காய்ந்த கருப்புத் திராட்சை, பீட்ரூட், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பீன்ஸ், சோயா பீன்ஸ், மீல்மேக்கர், கொத்தவரங்காய், முட்டை, தானியங்கள், பருப்பு வகைகள், மொச்சைக்கொட்டை, பட்டாணி, கொண்டைக்கடலை ஆகியவற்றில் இரும்புச் சத்துகள் அதிக அளவில் உள்ளன.
இதைத் தவிர, வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் சாப்பிடுவதும் பெண்களுக்கு உடல்நலனை மேம்படுத்தும். ஆரஞ்சு, எலுமிச்சம் பழம், ப்ரோக்கோலி, ஸ்ட்ராபெரி ப்ரூன்ஸ் போன்றவையும் சத்துகள் நிறைந்த உணவுகளாகும்.
-ஏ.எஸ்.பிலால், மண்ணடி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.