தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பாட்டி வைத்தியம்...

வல்லாரைக் கீரையை வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட்டால், ஞாபகச் சக்தி அதிகரிக்கும். ஆயுள் விருத்தியாகும்.

News image
Updated On :22 பிப்ரவரி 2025, 6:31 pm

இரா.ரெங்கசாமி

வல்லாரைக் கீரையை வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட்டால், ஞாபகச் சக்தி அதிகரிக்கும். ஆயுள் விருத்தியாகும்.

காக்காய் வலிப்புக்கு சதக் குப்பைக் கீரை நல்லது.

ஓமத்தை நன்கு அரைத்தெடுத்து சம அளவு வெல்லம் கலந்து தொடர்ந்து 7 நாள்கள் சாப்பிட்டுவந்தால், சொறி, சிரங்கு நன்கு குணமாகும்.

தூதுவளை இலையை அரைத்துக் குடித்தால் சளித் தொல்லை நீங்கும்.

பூசணிக்காயின் காய்ந்தத் தோலையும், சீரகமும் கலந்து கஷாயம் செய்து அருந்தினால், பெண்களுக்கு ஏற்படும் "பெரும்பாடு' நோய் குணமாகும்.

வெள்ளை முள்ளங்கியை இடித்துச் சாறு எடுத்து ஒரு டம்ளர் வீதம் பருகினால், சிறுநீரக நோய்கள் குணமாகும்.

அன்றாடம் சமையலில் கசகசாவைச் சேர்த்து வர தூக்கம் நன்கு வரும்.

சுக்கு காபி குடித்தால், வாய்வுப் பிடிப்பு நீங்கும்.

-இரா.ரெங்கசாமி, வடுகபட்டி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.