தும்பைச் செடி வயல்களிலும் இதரப் பகுதிகளிலும் தானே வளரும் அரிய வகை மூலிகைச் செடியாகும். இதன் மருத்துவக் குணங்கள்:
அதிகாலையில் தும்பைப் பூவை பசும்பால் விட்டு அரைத்து குடிக்க விக்கல் நீங்கும்.
தும்பை இலைச் சாறை தேன் கலந்து குடிக்க நீர்க்கோவை குணமாகும்.
தும்பை இலைச்சாறை மூன்று சொட்டுகள் மூக்கிலிட்டு, உறிஞ்சித் தும்பினால் தலையில் நீரோ, கபால நீரோ, மண்டைக் குத்து, மண்டையிடி போன்ற நோய்கள் குணமாகும்.
தும்பை இலை, கீழாநெல்லி இலை ஆகிய இரண்டையும் சம அளவாக எடுத்து, அரைத்து சுண்டைக்காய் அளவு ஒரு டம்ளர் பசும்பாலில் கலந்து இரு வேளை குடித்து வந்தால், பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னைகள் தீரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.