தேவைக்கு அதிகமாக இஞ்சி இருந்தால், அதை மண்ணில் புதைத்து வைத்து தண்ணீர் விட்டு வையுங்கள். தேவைப்படும்போது எடுத்து உபயோகிக்கலாம். இஞ்சி காய்ந்து போகாது.
பூவை ஈரத் துணியில் சாற்றி வைக்காதீர்கள். ஒரு பாத்திரத்தை நன்கு கழுவிவிட்டு அந்தப் பாத்திரத்துக்குள் பூவை வைத்து மூடுங்கள். பூ வாடாமல் வைத்தபடியே இருக்கும்.
ஜாம் பாட்டிலில் ஜாம் தீர்ந்துவிட்டால், அதில் பாலை ஊற்றுங்கள். பாட்டிலில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஜாம் பாலுடன் கலந்து கரைந்துவிடும். பின்னர், அந்தப் பாலை அருந்தினால் சுவையாக இருக்கும். ஜாம் வீணாகாது.
அளவுக்கு அதிகமான கேரட் சேர்த்துகொண்டால், தோல் மஞ்சள் நிறமாக மாறக் கூடும்.
அளவுக்கு அதிகமாக சிவப்பு மிளகாயைப் பயன்படுத்தினால், இரைப்பைப் புண்கள் அதிகரிக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.