
கை, கால் நடுக்கம், நரம்புத் தளர்ச்சி போன்ற நோய்களுக்கு அரைக்கீரைச் சாற்றில் மிளகை ஊறவைத்து உலர்த்தி, தூளாக்கி தினம்தோறும் சிட்டிகை அளவில் தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால், விரைவில் சரியாகும்.
சுக்கு, பூண்டு, மிளகு, பெருங்காயம் சேர்த்துக் கடைந்து அல்லது குழம்பு மற்றும் பொரியல் செய்து சாப்பிட்டால், வாதம், வாய்வு தொடர்புடைய நோய்கள் குணம் அடையும்.
கோயிலில் தேங்காய் உடைக்கும்போது, தேங்காயில் பூ இருந்தால் அதனை நல்ல சகுனமாக நாம் கருதுவோம். அறிவியல் ரீதியாக தேங்காய்ப் பூ என்பது தேங்காயில் உண்டாகும் கரு வளர்ச்சிதான். அதன் மருத்துவக் குணங்கள் மிகவும் அதிகம்.
ஜீரண சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு தேங்காய்ப் பூ சிறந்த மருந்தாகும். இதில், உள்ள மினரல்ஸ், வைட்டமின்கள் உடலில் குடலுக்குப் பாதுகாப்பை அளிக்கிறது. மலச்சிக்கலைக் குணமாக்குகிறது.
தேங்காய்ப் பூ இன்சுலின் சுரப்பைத் தூண்டுகிறது. இதனால் ரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரையைக் கட்டுப்படுத்த முடியும்.
தேங்காய்ப் பூவில் முதுமையைத் தடுக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்துள்ளன.
இதனால் அவற்றை சாப்பிட்டால், உடலில் சுருக்கங்கள், வயதான தோற்றம், சருமத் தொய்வு போன்றவை நெருங்காது. சூரியனால் உண்டாகும் சருமப் பாதிப்புகளையும் தடுக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.