
கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனியின் பொறுமை, நிதானம் அவருக்கு 'கேப்டன் கூல்' என்ற பட்டத்தையே அளித்துள்ளது.
'அழுத்தமான சூழலிலும் அமைதி, அடுத்து என்ன நடக்கலாம் என கணிக்கும் திறன், இளம்திறமைகளை கண்டறிந்து
ஊக்குவிப்பவர், நாற்பத்து நான்கு வயதிலும் விளையாட்டுத் துறையின் அடையாளம், அமைதியான தலைமை தத்துவம், கடுமையான சூழல்களிலும் சிறப்பாக செயல்படுதல்...' போன்றவை அவருடைய சிறப்பம்சங்கள்.
அவருடைய துடிப்பான விக்கெட் கீப்பிங், ரன்களை துரிதமாகச் சேகரிப்பது வெற்றிக்கு கொண்டு செல்வதிலும் அவருக்கு ஈடு இணையில்லை. இவற்றின் மூலமே அவர் பல சாதனைகளை செய்துள்ளார். அவற்றில் சில:
மூன்று ஐ.சி.சி. சாம்பியன் டிராபி போட்டிகளில் (2007,2011,2013) வென்று பட்டங்களை கைவசம் ஆக்கினார்.
அதிக சர்வதேச போட்டிகளின் கேப்டன்: டெஸ்ட்60, ஒரு நாள் போட்டி200, டி20 போட்டிகள்:72.
ஸ்டம்பிங் (விக்கெட் கீப்பர்)மூலம் மிக அதிக எதிர் விக்கெட்டுகளை சாய்த்தவர் (195).
ஐ.பி.எல். கேப்டனாக அதிக போட்டிகள் 235.
பத்து முறை ஐ.பி.எல் கேப்டனாக அதிக இறுதி போட்டிகளில் பங்கேற்றார்.
ஐ.பி.எல் போட்டிகளில் தலைவராக ஐந்து முறை தன்னுடைய அணி சென்னை சூப்பர் கிங்ஸூக்கு கோப்பையை பெற்றுத் தந்தவர்.
டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர். 2013இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 223 அடித்து சாதனை படைத்தார்.
ஒரு போட்டியில் விக்கெட் கீப்பர் அடித்த மிகப் பெரிய ரன் சேஸிங் ஸ்கோர்: 2005இல் இலங்கைக்கு எதிராக 183 ரன்கள் அடித்து எதிரணி பெளலர்களை துவம்சம் செய்தார்.
ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக நாட் அவுட் சாதனையாளர் தோனி. 84 போட்டிகள்.இது அவரை ஒரு சிறந்த பினிஷராக காட்டியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.